கொழும்பில் அதிகரிக்கும் கொரோனா!


நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 963 கொவிட் நோயாளர்களுள், அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 298 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

255 பேர் கம்பஹா மாவட்டத்திலும், 81 பேர் களுத்துறை மாவட்டத்திலும் பதிவாகியுள்ளனர்.

நாட்டின் ஏனைய மாவட்டங்களில், 321 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.