பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி!


பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான ஆவணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களில், வைத்தியசாலைகளில் பயிற்சிகளை பெற்றுக் கொள்ளும் மருத்துபீட மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு கோரப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

4,800 மருத்துவ பீட மாணவர்கள் வைத்தியசாலைகளில் பயிற்சிகள் பெற்று வருகின்றனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.