ரெஜிபோர்மில் விமானம் தயாரித்து மைதானத்தில் பறக்கவிட்ட நபர் கைது!
இலங்கையில் ரெஜிபோர்மில் விமானம் தயாரித்து மைதானத்தில் பறக்கவிட்ட நபர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நபர் பொழுதுபோக்காக பிளாஸ்டிக் மற்றும் ரெஜிபோர்ம் உள்ளிட்ட பொருட்களுடன் பிற உபகரணங்களையும் கலந்து நீளமான விமானத்தை தயாரித்துள்ளார்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட அந்த விமானத்தை சுமார் 75 அடி உயரத்தில் பறக்க வைத்துக்கொண்டிந்தபோதே பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.
அருக்வட்டவில் வசிக்கும் குறித்த சந்தேக நபர் கொழும்பு பிரதான அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரிவதாக சொல்லப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், கொழும்பு பகுதியில் இருந்து பொழுதுபோக்கிற்காக இதுபோன்ற இலகுவான விமானங்களை வடிவமைத்து, விளையாட்டு மைதானங்களுக்கு பறக்கவிட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.
இதேவேளை குறித்த இளைஞனின் திறமையினைப் பாராட்டுவதை விடுத்து இவ்வாறு கைதுசெய்தமையானது மிலேச்சத்தனமான செயல் என பலரும் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை