இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 578 ஓட்டங்களை குவித்தது!


இந்தியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிற்காக இங்கிலாந்து அணி 578 ஓட்டங்களை குவித்துள்ளது.

4 டெஸ்ட் போட்டி, 4 இருபதுக்கு இருபது போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து முதலில் களமிறங்கியது.

அதன்படி போட்டியின் மூன்றாவது நாள் ஆரம்பத்தில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 578 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக அணித்தலைவர் ஜோ ரூட் 218 ஓட்டங்களையும் சிப்லி 87 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ் 82 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் பும்ரா மற்றும் அஷ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்த நதீம் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இந்நிலையில் தற்போது இந்தியா அணி தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வருகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.