#P2P கிளிநொச்சி-பொலிகன்டி!!


அடங்கியிருந்தால்

முடங்கியிருந்தால்

யார் வந்திதை தொடங்குவது


தமிழன் அணிதிரண்டு

எழுந்து வந்தால்

எம்நிலத்தில் எவன்

நின்று திமிருவது


தடங்கல் கண்டு

தவமிருந்தால்

தமிழன் உரிமை

கிடைக்குமா


பெருங்களங்கள்

கண்டபேரினம்

பெட்டிப்பாம்பாய்

கிடக்குமா


தடைதாண்டி

தமிழன் வந்தால்

உலகம்

தலை வணங்குமே


தன்மானம்கொண்டு

தமிழன் எழுந்தால்

எதிரி தலைகள்

எங்கும் நொருங்குமே


படைகளைப்பார்து

பயந்துவிடாதே-புலிப்

படைகள் துரத்தி

அடித்ததை மறந்துவிடாதே


தலைவனை நினைத்து

தமிழா வா

தலைகளை நிமிர்த்தி

தமிழா வா

தடைகளை தகர்ப்போம்

தமிழா வா

தாய்நிலம் காப்போம்

தமிழா வா.


த.யாளன்

07.02.2021

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.