இதுவரை கிழக்கில் 2,534 கொரோனா தொற்றாளர்கள்!


கிழக்கு மாகாணத்தில இதுவரை இரண்டாயிரத்து 534 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர், வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

இவர்களில் இரண்டாயிரத்து 278 பேர் சிகிச்சை பெற்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளதுடன், 16 பேர் கொரோனாவால் மரணித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக மாநாட்டின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் 486 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 619 பேர், அம்பாறையில் 175 பேர், கல்முனை சுகாதார பிராந்தியத்தில் ஆயிரத்து 256 பேர் என இரண்டாயிரத்து 534 பேர் நேற்றுக் காலை வரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளர். இதேவேளை, இன்னும் 265 பேர் தொடர்ந்து சகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக 46 சுகாதார அதிகாரிகள் பிரிவின் சுகாதார ஊழியர்களுக்கும் அவர்களுடன் சார்ந்தவர்களுக்கும் என நேற்றுக் காலை வரை எட்டாயிரத்து 503 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியர் லதாகரன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.