தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு!


தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் குறித்து இன்று (திங்கட்கிழமை) இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தங்களுடைய சிக்கல்கள் தொடர்பில் இன்று மாலை அமைச்சர் நிவாட் கப்ரால் உடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்துகளுக்கான தவணை கட்டணத்திற்கான வட்டியை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நாளையதினம் தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட திட்டமிட்டிருந்தன.

எவ்வாறாயினும் இன்று இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் குறித்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இறுதி முடிவை அறிவிப்பதாக கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.