ஏலே திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகுகிறது!


பூவரசம் பீ பீ, சில்லுக்கருப்பட்டி படங்களின் மூலம் கவனம் ஈர்த்த பெண் இயக்குனர் ஹலீதா சமீம் இயக்கியுள்ள ஏலே திரைப்படம் தொலைக்காட்சியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ‘ஏலே’ திரைப்படம் திரையரங்கங்கில் வெளியாக மூன்று நாட்களே இருந்த நிலையில் சில ஆச்சர்யகரமான புது விதிகளாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களாலும் படத்தை திரையரங்கிற்கு கொண்டு வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஆகையால் திரையரங்கங்களை தவிர்த்து எங்கள் படத்தினை உலகம் முழுதும் உள்ள ரசிகர்களுக்கு எடுத்து செல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியுடன் இணைந்து 2021 பிப்ரவரி 28 அன்று ஞாயிறு பகல் 3 மணிக்கு உலகதொலைக்காட்சிகளில் முதல் முறையாக நேரடியாக இத்திரைப்படத்தினை வெளியிடுகிறோம்.

திறமையாளர்களுக்கான வாய்ப்புகளையும், இரசிகர்களுகான தரமான கதைகளையும் திரையரங்கு உட்பட அனைத்து தளங்களிலும் வழங்குவதில் எங்கள் நிறுவனம் எப்போதும் முனைப்புடன் செயல்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.