சாத்தூர் வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழப்பு!
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் மாரியம்மாள் பயர் ஒர்க்ஸ் என்னும் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.
குறித்த ஆலையில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில், பொலிஸாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை