முகநூல் காதலை நம்பி வீட்டை விட்டு ஓடிய பெண்ணின் நிலை!


தனது தொலைபேசி காதலனுடன் வாழ்வதற்காக வீட்டைவிட்டு ஓடிச் சென்ற 20 வயதான அழகிய இளம் யுவதியொருவர், காதலனின் வீட்டிற்கு சென்றதும் அவர் யாரென தெரிந்தும் சாமர்த்தியமாக 119 அவசர இலக்கத்தை தொடர்பு கொண்டு தப்பிப்பிழைத்த சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முகக்கவசம் அணிந்தபடி யுவதியை வீட்டிற்கு அழைத்து சென்ற தொலைபேசி காதலன், முகக்கவசத்தை அகற்றியதும் வயோதிபர் என்பது தெரிய வந்ததை தொடர்ந்தே இந்த களேபரம் இடம்பெற்றது.

முகநூல் காதலனும், காதலியும் அரணாயக்க பொலிசாரால் பொறுப்பேற்கப்பட்டனர். யுவதி தனது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

நிலச்சரிவில் தனது மனைவி, இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த 52 வயதான நபரே இந்த மன்மத வித்தையை காண்பித்துள்ளார்.

கேகாலை மாவட்டத்தின், வசந்தகமவில் உள்ள செனேக சியபத கிராமத்தில் அவர் தற்போது தனியாக வசித்து வந்தார்.

முகநூல் வழியாக அறிமுகமான யுவதியொருவருடன் கடந்த ஆறு மாதமாக காதல் வசப்பட்டுள்ளார். தன்னை இளைஞனாக காண்பித்து முகநூல் காதலியுடன் பேசி வந்தார்.

கந்தளாய், அக்போபுர பகுதியை சேர்ந்த 20 வயதான அந்த யுவதியும், இளைஞன் ஒருவரை காதலிப்பதாக நினைத்து உருகி உருகி காதலித்துள்ளார்.

காதல் முற்றியதும், அந்த யுவதியை தன்னுடன் வாழ வருமாறு காதலன் அழைத்தார். யுவதி வீட்டை விட்டு வெளியேறி வந்தால், இருவரும் தனித்து வாழலாமென்றும் யோசனை சொல்லியிருந்தார்.

இதையடுத்து, கடந்த 11ஆம் திகதி இரவு தனது வீட்டிற்கு தெரியாமல் யுவதி வெளியேறினார். வீட்டிலிருந்த நகைகளையும் எடுத்துக் கொண்டு அப்போபுர பேருந்து நிலையத்திற்கு சென்றார்.

குறிப்பிட்ட நேரத்தில் முகநூல் காதலனும் பேருந்து நிலையத்திற்கு சென்றார். அந்த நேரத்தில் பேருந்து நிலையத்தில் போதுமான வெளிச்சமிருக்கவில்லை. எனினும், தொலைபேசி அழைப்பின் மூலம் இருவரும் சந்தித்து, அவசர அவசரமாக மாவனெல்லைக்கு பேருந்தில் ஏறினர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.