பிரான்ஸ் - யேர்மன் எல்லையைச் சுற்றி புதிய கோவிட் -19 கட்டுப்பாடுகள்!

 


பிரான்ஸ் யேர்மனியுடனான அதன் பொதுவான எல்லையைச் சுற்றி புதிய கோவிட் -19 கட்டுப்பாடுகளை கொண்டு வரும் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.


குறிப்பாக மொசெல்லே பிராந்தியத்தில் கொரோனா வைரஸ்  எழுச்சியைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எல்லை தாண்டிய தொழிலாளர்கள், தங்கள் வேலைகளுடன் தொடர்பில்லாத காரணங்களுக்காக பயணம் செய்தால் எதிர்மறையான பி.சி.ஆர் சோதனைகளை முன்வைக்க வேண்டும் என்று பிரான்சின் ஐரோப்பிய விவகாரங்கள் மற்றும் சுகாதார அமைச்சர்கள் ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தனர்.

பிரான்ஸ் மற்றும் யேர்மனி இந்த வார தொடக்கத்தில் தங்கள் பொதுவான எல்லையை மூடுவதைத் தடுப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதாகக் கூறியுள்ளது.

எனினும் கூட்டு பிரான்ஸ்-யேர்மன் பொலிஸ் ரோந்துப் பணிகளை முடுக்கிவிடலாம், 

பிராந்தியத்தில் பிரான்சின் தடுப்பூசி திட்டமும் விரைவுபடுத்தப்பட்டு வருவதாகவும், சோதனை அதிகரிக்கப்படும் என்றும்  கூறினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.