இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசிகளை பெறமாட்டோம்!


இராணுவ வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஊடகமொன்றுக்கு அறிவித்துள்ளார்.

கடந்த காலங்களின் இராணுவத்தின் செயற்பாட்டை தாம் ஏற்றுக்கொள்ள போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொவிட் 19 தடுப்பூசியை மாவட்ட ரீதியிலான சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் செலுத்துவதற்கான வசதிகள் உள்ள போதிலும், அதனை இராணுவ வைத்தியசாலையில் செலுத்துவதற்கான காரணம் என்ன? எனவும் அவர் கேள்வி இதன்போது எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.