அமைச்சர்களின் பொறுப்புக்களில் தீடீர் மாற்றம் செய்த ஜனாதிபதி!


அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் விடயமானங்கள் சிலவற்றை திடீரென மாற்றம் செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

இதில் பெப்ரவரி 15ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையிலான விடயமான மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இராஜாங்க பாதுகாப்பு மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சிற்கு கீழ் 18 விடயமானங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், பதிவாளர் திணைக்களம், இடர் முகாமைத்துவம், வளிமண்டலியல் திணைக்களம், தேசிய கட்டிட ஆய்வகப் பணியகம், ஔடத நிர்வாக அதிகார சபை என்பன இந்த அமைச்சிற்கு கீழே கொண்டுவரப்பட்டுள்ளன.

அதேபோல உள்விவகார இராஜாங்க அமைச்சிற்கு கீழ் அனை்தது மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அத்துடன் காணி அமைச்சிற்கு கீழ் மேலும் 7 நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, காணி ஆணையாளர் திணைக்களம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, நில அளவையகத் திணைக்களம், காணி அளவீட்டு அதிகார சபை, காணி கொள்கைத் திட்டமிடல் திணைக்களம் மற்றும் காணி பிணக்குகள் தீர்க்கும் திணைக்களம் என்பன இவ்வாறு காணி அமைச்சிற்கு சார்ந்ததாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.