யாழில் தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் ஆரம்பம்!


தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் ஆரம்பமாகியுள்ளது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியுள்ள இந்தக் கூட்டத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்புக்கள், தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் மற்றும் அத்துமீறல்களைத் தடுப்பதற்கு எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.