கொரோனா தொற்றிலிருந்து பழ. நெடுமாறன் குணமடைய சிறப்பு வழிபாடு!


கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் நலம் பெறவேண்டி நல்லூரில் சிறப்பு வழிபாடு இடம்பெற்றது.

கொரோனா தொற்றினால் சில தினங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்டு, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 83 வயதான பழ. நெடுமாறன் இலங்கை தமிழ் மக்களின் மீது தீவிர பற்றுக் கொண்டவர்.

இந்நிலையில், அவர் விரைவில் நலம்பெற்று வீடு திரும்பவேண்டுமென, சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நல்லூல் கந்தசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு இடம்பெற்றது.

இதில், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும், ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமுமான அனந்தி சசிதரனும் கலந்துகொண்டார்.

ஈழத்தமிழர் போராட்டத்தில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாகத் தன்னை அர்ப்பணித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர் பழ. நெடுமாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.