எங்கும் காதல்...!
அண்டம் எக்கும்

 உருளும் காதல்

அலையாய் மனதை

வருடும் காதல் 

இதயம் தொடுவது மட்டுமா 

இயற்க்கை அசைவதும்

கனமான காதலே

மண்ணில் மழையாய்

பனியில் ஒளியாய்

இரவில் நிலவாய்

தரை தொடும் அலையாய்

மணல் கீறும் நண்டின்

மையலும் காதலே....


பூவின் மடலில் இருப்பதும்

கண்ணை மடல் காப்பதும்

கண்ணிழந்தோர் 

கற்சிற்ப்பத்தை தொட்டு ரசிப்பதும்

செவியிழந்தோர் அசைவுகளால்

இசையை உணர்வதும்

ஊமையின் பார்வை

வாயின் அசைவை

உற்று நோக்குவதும் 

ஏக்கம் தரும் காதலே.....


முத்தம் சிந்தும் குழந்தையின்

முகத்தில் இருப்பது

மழலை காதல்

முதியவர் முதுகின்

வளைவில் இருப்பது

அனுபவ காதல்

இரு......

இதயங்கள் இணைவதும்

இணையாது போனால்

புரிதலில் வரும்

பிரிதலில் இருப்பதும்

வலிகள் நிறைந்த காதலே.....


குருதிப் புனலில்

உறைந்த காதல்

அரசன் தொடக்கம்

ஆண்டி வரைக்கும்

சமத்துவம் நிறைந்த காதல்

அடியும் இல்லை

முடியும் இல்லை

அண்டம் நிறைந்த காதல்

நிஜத்தில் இங்கே

நினைத்து பார்த்தால்

அகிலம் எங்கும்

அழகான காதலே....!


-தனு இத்தாலி-

21.02.2021

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.