நாளை யாழில் தமிழ் உணர்வாளர்களின் உரிமைப் போராட்டம்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழ் உணர்வாளர்களின் உரிமைப் போராட்டம் நாளைய தினம் யாழ்ப்பாணத்தில் சங்கமிக்கவுள்ள நிலையில் யாழில் மக்கள் பேரெழுச்சி ஒன்று நிகழப்போவதாக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக வடகிழக்கின் ஏனைய மாவட்டங்களை விட அதிக சனத்தொகை கொண்ட யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த போராட்டம் நாளை சென்றடைந்து முடிவடையவுள்ள நிலையிலேயே இந்த கணிப்பு வெளியாகியுள்ளது.
கட்சி பேதங்களைக் கடந்து தமிழ் தேசியம் சார்ந்து சிந்திக்கத்தக்க பொது அமைப்பினர் அனைவரும் ஒன்றுகூடி பொலிகண்டி வரையான முக்கிய நகரங்களில் தமது உணர்வெழுச்சியினைக் காட்டவுள்ளதாக தெரியவருகின்றது.
விடுதலைப்புலிகளின் காலத்தில் நடந்த பொங்குதமிழ் எனும் மக்கள் பேரணியின்போது யாழ்ப்பாணமே ஒன்றுகூடி பெரும் சனக்கடலாக திரண்டதற்குப் பின்னர் யாழில் பல்வேறு உரிமைசார் பேரணிகள் நடைபெற்றபோதும் மக்களின் கணிசமான பங்களிப்பென்பது மந்தகதியிலேயே இருந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த எழுக தமிழ் பேரணியின்போதும் கிட்டத்தட்ட பத்தாயிரம் மக்கள் யாழில் கலந்துகொண்டனர்.
அந்த போராட்ட என்ணிக்கையையும்விட நாளைய தினம் அத்தனை உணர்வாளர்களும் பொங்குதமிழை ஒத்த அளவில் ஒன்றுகூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள் எமது செய்திச் சேவையிடம் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை