யாழ்ப்பாணத்தை முழுமையாக முடக்க அழைப்பு!
யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் திரள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மன்னாரில் வைத்து அழைப்பு விடுத்துள்ளார்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி மன்னார் நகருக்குள் சென்றதுடன், தற்போது பேரணி மன்னார் மத்திய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்ததுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அங்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
இதன்போது மன்னாரில் கிடைத்த பாரிய ஆதரவு கண்டு தாம் நெகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இது நகைச்சுவையான விடயம் இல்லை எனவும், மக்கள் உணர்ச்சிப் பெருக்குடன் குறித்த பேரணியில் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை