போதைப்பொருள் கடத்தல்காரனிற்கு சீருடை கொடுத்த பொலிஸ்!


புகைப்படம் எடுப்பதற்காக தனது பொலிஸ் சீருடையை இன்னொரு நபருக்கு வழங்கிய பொலிஸ் அதிகாரிஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகரகம பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

சில தினங்களின் முன்னர் கிளிநொச்சி, ஆனையிறவு பகுதியில் ஹெரொயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்போது அவரது கையடக்க தொலைபேசியை ஆய்வு செய்தபோது, அவர் பொலிஸ் சீருடையில் இருந்த புகைப்படங்கள் காணப்பட்டன.

அது தொடர்பில் அவரிடம் விசாரணைசெய்தபோது குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் விருந்திற்காக தனது வீட்டுக்கு வந்தபோது, அவரது சீருடையை அணிந்து புகைப்படம் எடுத்ததாக கூறியிருந்தார்.

சீருடையில் உள்ள எண்ணின் படி, பொலிஸ் உத்தியோகத்தர் அடையாளம் காணப்பட்டு காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டபொது அவர் ஆஜராகாத நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.