மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 12 புதியவர்கள் நியமனம்!


மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 12 பேர் புதிதாக நியமனம் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த நியமனங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வழங்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாவட்ட நீதிபதிகள் 7 பேர், மேலதிக மாவட்ட நீதிபதிகள் 3 பேர், பிரதான நீதவான் ஒருவர் மற்றும் அரச சட்டத்தரணி ஒருவர் ஆகியோருக்கே இவ்வாறு மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.