பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட தகவல்!


இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடால், அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நாட்டை முடக்குவதற்கு தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய செயற்பாட்டு மையம் கூடும்போது இந்த பிரச்சினை குறித்து நாளை விவாதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தொற்றுநோயியல் பிரிவு நிலைமையை ஆய்வு செய்து வருவதாகவும் அதன் பின்னர் இந்த விடயம் தொடர்பாக எடுக்க வேண்டிய தீர்மானம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர்  கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.