முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!


வடக்கில் இயங்கிவரும் ஷாணு பவுண்டேசன் ஊடாக முன்பள்ளி மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆயிரம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நடவடிக்கைகள் கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ரியோ மணிரான்ஸ்பர் நிறுவனத்தின் அனுசரணையுடன் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள ஆயிரம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் மற்றும் வறிய 100 மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நடவடிக்கைகளை ஷாணு பவுண்டேசன் முன்னெடுத்து வருகின்றது.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) மட்டக்களப்பிலும் நடைபெற்றது.

மட்டக்களப்பு- புன்னைச்சோலை மெதடிஸ்த முன்பள்ளி மற்றும் கோட்டைமுனை மெதடிஸ்த முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  நேற்று  நடைபெற்றது.

ஷாணு பவுண்டேசனின் பணிப்பாளர் என்.தர்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தன்னாமுனை மெதடிஸ்த திருச்சபையின் போதகர் வசந்த செல்வம், சின்ன ஊறணி மெதடிஸ்த திருச்சபையின் போதகர் கே.ஜெகதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் சுமார் 100 மாணவர்களுக்கான புத்தக பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

முன்பள்ளி கல்வியை ஊக்கப்படுத்துவதன் ஊடாக சிறந்த மாணவர்களை சமூகத்தில் ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான உதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஷாணு பவுண்டேசனின் பணிப்பாளர் என்.தர்சன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.