பொலிஸார் வெளியிட்டுள்ள அவசர எச்சரிக்கை!
காதலர் தினத்தை முன்னிட்டு மக்களை ஏமாற்றும் வகையில் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அலைபேசிகள் அல்லது சமூக ஊடக கணக்குகளுக்கு போலியான குறுஞ்செய்தி அனுப்பலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
“உங்கள் காதலன் அல்லது காதலி பரிசு அனுப்பியுள்ளதாகவும், அதைப் பெற பணத்தை வைப்பிலிட வேண்டும்” எனவும் மோசடியாளர்கள் கூறலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இதுபோன்ற செயற்பாடுகள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை