பிரதமரினால் ஆராச்சிகட்டுவ லங்கா சீ புட் தொழிற்சாலை திறந்துவைப்பு!


புத்தளம் ஆராச்சிகட்டுவ பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள லங்கா சீ புட் (கடலுணவு) தொழிற்சாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று (வியாழக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது.

சர்வதேச சந்தையை இலக்காக கொண்டு மீன் ஏற்றுமதியில் ஈடுபடும் லங்கா சீ புட் நிறுவனம் சுமார் 600 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சர்வதேச சந்தையை இலக்காக கொண்டு புதிய தொழிற்சாலையில் உயர் தரத்திலான மீன் பதப்படுத்தும் நடைமுறையை பிரதமர் பார்வையிட்டார்.

ஏற்றுமதி தரத்திலான லங்கா சீ புட் தயாரிப்புகளை எதிர்காலத்தில் உள்ளூர் நுகர்வோருக்காக நாடு முழுவதும் உள்ள சந்தை வலையமைப்பின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

லங்கா சீ புட் நிறுவனத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நிறுவனத் தலைவர் சரத் கித்சிறி, இதன்போது பிரதமருக்கு விளக்கமளித்தார்.

குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான சனத் நிசாந்த, லொஹான் ரத்வத்தே, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிந்தக மாயாதுன்னே, அசோக பிரியந்த மற்றும் லங்கா சீ புட் நிறுவனத்தின் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.