மருத்துவ பணியாளர்களுக்கே அதிக மன உளைச்சல்!


கொரோனா நெருக்கடி காரணமாக மன உளைச்சல் ஏற்படும் அபாயம் செவிலியர் மற்றும் பெண் சுகாதாரப் பணியாளர்களுக்கே அதிகம் இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழக நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு முதல், 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை உலகம் முழுவதும் கொள்ளை நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்களைக் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 1.45 இலட்சம் மருத்துவப் பணியாளர்கள் குறித்த விபரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அவர்கள் அனைவரின் வாழிடம், வயது, தொழில் ஆகியவற்றின் அடிப்படையிலும் நோய்த்தொற்றுக்கு எதிரான பணியின்போது அவகளுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சல் அடிப்படையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், கொரோனா மட்டுமின்றி, சார்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், எபோலா போன்ற அனைத்து கொள்ளை நோய் நெருக்கடியாலும், அதிக அளவில் மன உளைச்சலுக்குள்ளாகும் அபாயம் பெண் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் செவிலியருக்கே உள்ளது தெரியவந்தது.

கொரோனாவுக்கு முந்தைய சார்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களுக்கு எதிரான பணிகளில் ஈடுபட்டவர்கள் குறித்து ஆய்வு செய்ததில், கொள்ளை நோய் ஏற்படுத்தும் மன உளைச்சல் பாதிப்புகள் 3 ஆண்டுகள் வரை தொடரும் என்று தெரியவந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.