அம்பாந்தோட்டையில் குண்டுத் தாக்குதல்!


 அம்பாந்தோட்டை – கட்டுவன, மொரகஹலகொட பிரதேசத்தில் வீடொன்றை இலக்குவைத்து கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் அதில் காயமடைந்திருப்பதாகவும் கட்டுவன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று இரவு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலிடையே இந்த கைக்குண்டுப் பிரயோகம் இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

அத்துடன் இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த கட்டுவன பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.