ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற அமர்விற்காக அழைக்கப்பட மாட்டார்!


நீதிமன்ற விசாரணைகள் நடைபெறுவதால் நாடாளுமன்ற அமரிவுகளில் கலந்துகொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அனுமதிக்கப்பட மாட்டார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது, ரஞ்சன் ராமநாயக்கவை நாளைய அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்தே அவர் இவ்வாறு கூறினார்.

கொலை குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற பிரேமலால் ஜெயசேகர மேன்முறையீட்டின் அடிப்படையில் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி குறித்த கோரிக்கையை முன்வைத்தது.

இதேவேளை கொலையாளியை நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ள அனுமதிப்பதன் மூலம் சபாநாயகர் நாட்டில் ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கியதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.