வெள்ளித்திரைக்கு 21 வருடங்களுக்கு பிறகு வரும் ஷாலினி!


தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய நடிகை ஷாலினி அஜித்குமார் காதலுக்கு மரியாதை திரைப்படத்தின்  மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத்தொடர்ந்து தற்போது ஷாலினி 21 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் மணிரத்னம் இயக்கி கொண்டிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளாராம்.

இந்தத் தகவல் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இந்த செய்தியை தல ரசிகர்கள்  கொண்டாடிவருகின்றனர். மணிரத்தினம் இயக்கம் என்பதால் மட்டுமே தல அஜித் இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.