புல்மோட்டையை நெருங்குகிறது பொத்துவில்- பொலிகண்டி பேரணி!


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டம், தற்போது புல்மோட்டையை நெருங்குவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.


மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது பொத்துவில்- பொலிகண்டி வரையான பேரணி

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்றாம் திகதி பொத்துவில்லில் ஆரம்பமான இந்த போராட்டம், நேற்று இரவு திருகோணமலையில் நிறைவடைந்தது.

இந்நிலையில் திருகோணமலையில் இருந்து மூன்றாவது நாளாகவும் இந்த போராட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலை, பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபாயை வழங்கல், காணிவிடுவிப்பு, அத்துமீறிய குடியேற்றம், நிரந்தர அரசியல் தீர்வு, முஸ்லிம்களின் மத உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட பல விடயங்களுக்கு  உரிய தீர்வை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,மதத் தலைவர்கள், வடக்கு- கிழக்கைச் சேர்ந்த பல தமிழ் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனைர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.