ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து விவகாரம்!
ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வது தொடர்பில் மார்ச் 16 ஆம் திகதி வரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்படுவதை இடைநிறுத்துமாறு கோரி ரஞ்சன் ராமநாயக்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு மீதான விசாரணைகள் கடந்த 5ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் நீதிபதி மாயாதுன்னே கொரோயா ஆகியோர் முன்னிலையில்  பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வது தொடர்பில் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என  உத்தரவிடப்பட்டது.

அத்துடன், குறித்த மனு எதிர்வரும் 11 ஆம் திகதி அதாவது இன்று மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.