எம்ஜிஆர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்த சசிகலா!


இன்று அதிகாலை ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் வீட்டுக்குச் சென்ற சசிகலா, அங்கு எம்ஜிஆர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி உள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா தண்டனை முடிந்து சென்னை வந்தார். நேற்று காலை பெங்களூருவில் இருந்து சென்னைக்குக் கிளம்பிய சசிகலாவுக்கு வழி எங்கும் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகளை ஒரு சில தொலைக்காட்சியினர் நேரடி ஒளிபரப்பு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 3 மணிக்கு சசிகலா பூந்தமல்லி நசரத்பேட்டைக்கு வந்தார்.

அங்கு அவருக்குக் கட்சித் தலைவர்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உற்சாக வரவேற்பு அளித்தன. அந்நிகழ்வில் போது சசிகலா வந்த காரின் மீது சுமார் 2 டன் பூக்கள் தூவப்பட்டுள்ளது.

அத்துடன் பட்டாசு வெடிப்பு, தீப்பந்தம், வாணவேடிக்கை என நடண்டஹ் வரவேற்பில் சசிகலாவுக்கு வெள்ளி விநாயகர் சிலை, ரூபாய் நோட்டு மாலை எனப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்ன்பின்னர் ராமாபுரத்தில் எம் ஜி ஆர் வாழ்ந்து வந்த வீட்டுக்கு சசிகலா சென்று அங்குள்ள எம் ஜி ஆர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திஉள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.