கத்தியை பயன்படுத்தி கழுத்தறுத்து கொன்ற மனைவி!


 கணவனுக்கும், மனைவிக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றவே, ஆத்திரம் கொண்ட மனைவி, மரக்கறி வெட்டும் கத்தியை எடுத்து தனது கணவனை பலமுறை குத்தியுள்ளார்.

இச் சம்பவம் மொனராகலைப் பகுதியின் நக்கலவத்தை என்ற இடத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் பலத்த கத்திக் குத்துக்கிலக்கான நபர், ஆபத்தான நிலையில் மொனராகலை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட மொனராகலை பொலிசார், கத்திக் குத்துக்கிலக்கான நபரின் மனைவியைக் கைதுசெய்துள்ளன்ர்.

அத்துடன், தாக்குதலுக்குப் பயன்படுத்திய கத்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் விசாரணைகள் நிறைவுற்ற பின்னர் கைதான பெண் மொனராகலை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளதாகவும் மொனராகலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.