பிரபல சிறுகதை எழுத்தாளர் ஷக்திக சத்குமார விடுவிப்பு!


சட்டமா அதிபரின் உத்தரவின் பிரகாரம் இலங்கையின் பிரபல சிறுகதை எழுத்தாளர் ஷக்திக சத்குமார, விடுவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஷக்திக சத்குமார தனது பேஸ்புக் பக்கத்தில் அர்தா என்ற தலைப்பில் நவீன சிறுகதையை வெளியிட்ட அடுத்தடுத்த நாட்களில், பிக்குகளையும் பௌத்தர்களை அவமதித்ததாக தெரிவித்து பிக்குகளின் சங்கம் பொலிஸில் முறைப்பாட்டினை வழங்கியது.

இருப்பினும் குறித்த சிறுகதை மூலம் பௌத்த மதத்தையோ அல்லது எந்த சமூகத்தையோ தான் அவமதிக்க வில்லை என ஷக்திக சத்குமார குறிப்பிட்டிருந்தார்.

இதனை அடுத்து ஏப்ரல் மாதம் முதலாம் திகதி பௌத்த பிக்குமாரை தனது எழுத்துக்களால் விமர்சித்தாரென சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய ஐ.நா. ஆதரவு சர்வதேச உடன்படிக்கையின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஷக்திக சத்குமார வின் வழக்கு விசாரணை மீண்டும் மீண்டும் தாமதங்களுக்கு உட்பட்ட நிலையில் அவரை விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.