உலகில் அதிகமாக விஷத்தினை உண்ணும் நாடு இலங்கை!


உலகில் அதிகமாக விஷத்தினை உண்ணும் நாடு இலங்கை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெணிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “நாம் உண்ணும் உணவுகளின் தரவுகளுக்கு அமைய உலகில் அதிகப்படியான விஷத்தினை இலங்கையர்கள் உண்கின்றனர்.

இவ்விடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் உள்ளதால் நான் ஒரு கோரிக்கை விடுக்கிறேன்.

நாம் 2010ஆம் ஆண்டில் இருந்து இந்நாட்டில் விஷத்தினை சேர்க்க வேண்டாம் என கோருகிறோம். நாடாளுமன்றம் உங்களின் கைகளில் உள்ளது. விஷம் சேர்க்கப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.