கடற்கரை பகுதியில் திருகோணமலை மீனவர்கள் போராட்டம்!


திருகோணமலை கடற்கரை பகுதியில் சிறு மீன்பிடி படகுகளில் தூண்டல் மூலமாக மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

பாரிய படகுகள் மூலமாகவும் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மூலமாக குறித்த பகுதியில் பலர் மீன்பிடியில் ஈடுபடுவதால் தாம் பாதிக்கப்படுவதாக தெரிவித்த மீனவர்கள் திருகோணமலை மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பகுதியில் தாம் தொழிலில் ஈடுபட தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆவ்ர்களுடைய தந்தையார் கடற்றொளில் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் தமக்கு அனுமதி வழங்கியதாக தெரிவித்த அவர்கள் தற்போது தாம் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தொழிலினை மேற்கொண்டு வருவதாக கவலை தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு தமது பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத்தரவேண்டும் என கோரிக்கை விடுத்ததோடு தீர்வுகள் எட்டப்படாவிடின் பாரிய போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவும் தாம் தயாராக இருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.