உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும்!


கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய நாட்டில் அனுமதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

கொரோனா தொற்று நீர்வழியாக பரவாது என நேற்றைய அமர்வின்போது, இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்ததை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்படும் என கூறினார்.

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் அடக்கம் செய்ய வேண்டும் என கோரி நாடு முழுவதும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

அத்தோடு அண்மையில் இடம்பெற்ற பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தின் பிரகடனத்திலும் அடக்கம் செய்யும் முறைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.