ரத்து செய்யப்பட்டதா இந்தியா - இலங்கை உடன்படிக்கை?


திருகோணமலையில் உள்ள எண்ணெய் களஞ்சிய தொகுதியை கூட்டாக அபிவிருத்தி செய்து இயக்குதல் தொடர்பான இந்தியா - இலங்கை இடையிலான உடன்படிக்கை இரத்து செய்யப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

கடந்த 17 ஆம் திகதியன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் மின்சக்தி அமைச்சர் நிகழ்த்திய உரையினை இந்த அறிக்கைகள் சரியான முறையில் பிரதிபலிக்கவில்லை என்றும், இந்த விடயத்தினை ஊடக சந்திப்பொன்றின் மூலமும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அமைச்சரின் ஊடக சந்திப்பில் கூறப்பட்டது போலவே, 2017 இன் புரிந்துணர்வு உடன்படிக்கை உட்பட ஏற்கனவே அமுலில் இருக்கும் இருதரப்பு உடன்படிக்கைகளின் பிரகாரம் குறித்த எண்ணெய் களஞ்சிய தொகுதியை கூட்டாக அபிவிருத்தி செய்து இயக்குவதற்கு பரஸ்பரம் ஏற்புடையதான முறைமைகள் குறித்து இரு அரசாங்கங்களும் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளன.

இந்த விடயம் குறித்து உத்தியோகபூர்வமான கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் அதன் பெறுபேறுகளை பரஸ்பர நலன்களின் அடிப்படையில் துரிதமாக அமுல்படுத்துவதற்கும் இந்தியா ஆவலுடன் உள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.