வீதியைவிட்டு விலகிய மோட்டார் சைக்கிள் - நபர் ஒருவர் உயிரிழப்பு!
யாழ்.பருத்துறை - திக்கம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கற்கோவலத்தைச் சேர்ந்த பவிகரன் (வயது -30) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார்.
இந்நிலையில் இன்று காலை அந்த வீதியூடாகப் பயணித்தவர்கள் பருத்தித்துறை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை