இந்தியாவில் 250 ருவிட்டர் கணக்குகள் முடக்கம்!
விவசாயிகளை தூண்டி விடும் வகையில் செயற்பட்ட 250 ருவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ருவிட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தின.
அதேபோன்ற வன்முறை சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் இருக்க எல்லைப் பகுதியில் அதிக அளவில் பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை