ஊடகவியலாளருக்கு புலனாய்வாளரினால் இடையூறு!


வவுனியாவில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு புலனாய்வாளர்களினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தை செய்தி சேகரிப்பதற்கு சென்ற வவுனியா பிராந்திய ஊடகவியலாளரான பாலநாதன் சதீசன் என்பவருக்கு அங்கு நின்ற புலனாய்வாளர் ஒருவர் இடையூறை ஏற்படுத்தியதுடன், குறித்த ஊடகவியலாளருடன் முரண்பட்டு அவரது கடமைகளுக்கும் இடையூறை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அவர் தனது செய்தி சேகரிப்பு பணியை சரியான முறையில் சுதந்திரமாக மேற்கொள்ள முடியவில்லை  என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.