திண்டாடும் விசுவமடு சந்தை வியாபாரிகள்!


முல்லைத்தீவு - கிளிநொச்சி எல்லைப்பகுதியில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட விசுவமடு சந்தை அமைந்துள்ளதால் இரு பிரதேச சபைகளும் வெளிவியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் பின்நிற்பதாக விசுவமடு சந்தை வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கொரோனா காலத்தில் சந்தை வளாகத்திற்குள் வியாபாரம் செய்யவேண்டாம் என பிரதேச சபை அறிவித்துள்ளது.

இதனையடுத்து வீதிகளில் வியாபாரிகள் அனைவரும் வியாபாரம் செய்துவந்த நிலையி மீண்டும் சந்தைகளில் வியாபார நடவடிக்கையினை தொடங்கியுள்ள நிலையில் மக்கள் சந்தைக்குள் வருவதை குறைத்துள்ளார்கள். ஏனெனில் வீதிகளில் தற்போதும் மரக்கறிகளையும் ஏனைய பொருட்களையும் போட்டு விற்கின்றார்கள்.

குறிப்பாக விசுவமடு சந்தையில் இருந்து ஒரு கிலோமீற்றருக்கு அப்பால்தான் வியாபார நடவடிக்கை செய்யவேண்டும் என பிரதேச சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளபோதும் சந்தையில் இருந்து 50 மீற்றர் தாண்டினால் அந்த பிரதேசம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான பிரதேசமாக காணப்படுகின்றது.

அத்துடன் எல்லைப்பகுதியில் விசுவமடு சந்தை அமைந்துள்ளதால் இரு மாவட்ட எல்லைக்குட்பட்ட பிரதேச சபையினரும் நடவடிக்கை எடுப்பதில் பின்னடிப்பதாகவும் எனவே இதற்கான தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என்றும் பாதிக்கபட்ட வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை மரக்கறியினை தம்புள்ள உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களில் இறக்குமதி செய்யும் வியாபாரிகளும் விசுவமடு சந்தை எல்லைக்குட்பட்ட வீதியில் பாரிய மரக்கறி கடையினை போட்டு விற்பனை செய்வதுடன் மரக்கறி வியாபாரிகள் மற்றும் கடைகளுக்கு மரக்கறியினை விநியோகம் செய்வதால் மக்கள் சந்தைக்குள் வருவுதை தவிர்த்து வருகின்றதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டு மாவட்டங்களில் எல்லைப்பகுதியில்உள்ள சந்தையான விசுவமடு சந்தை மரற்கறி மற்றும் வெற்றிலை கடை வியாபாரிகள் பாரிய நட்டத்தினை எதிர்கொண்டு வருகின்றார்கள் இன்னிலையினை இரண்டு மாவட்டத்தினை பிரதிநிதித்துப்படுத்தும் பிரதேச சபைகளும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.