மியன்மாரின் அரசியல் நிலைவரம் குறித்து இந்தியா கவலை!!


மியான்மாரில் இராணுவம், ஆட்சியை கைப்பற்றியதுடன் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்யப்பட்டுள்ளமை கவலை அளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மியான்மாரில் ஜனநாயகம் நிலவ வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம்.

மியான்மாரில் ஜனநாயக ரீதியிலான ஆட்சி நடக்க வேண்டும் என்பதற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது. அந்நாட்டின் அரசியல் சூழலை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

49 ஆண்டுகால இராணுவ ஆட்சிக்குப் பிறகு ஜனநாயக முறையில் அதிகாரத்துக்கு வந்த ஆங் சான் சூகியின் கட்சி அண்மையில் நடந்த தேர்தலிலும் பெரும்பான்மை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாட்டின் நன்மைக்காக ஒருவருடம் ஆட்சியை எடுத்துக்கொள்வதாக இராணுவம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.