மியான்மருக்கு எதிராக ஐநா மனித உரிமை பேரவையில் தீர்மானம்!


பிப்ரவரி முதலாம் திகதி இராணுவப் புரட்சி மூலம் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து மியான்மரின் நிலைமை குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் இருந்து சீனாவும் ரஷ்யாவும் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மியான்மரின் ஆலோசகர் ஆங் சான் சூகி மற்றும் ஜனாதிபதி வின் மைன்ட் உள்ளிட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களை விடுவிக்க வேண்டும் என்று தீர்மானம் கூறுகிறது.

நேற்று ஜெனீவாவில் நடைபெற்ற சிறப்பு அமர்வின் போது இது ஒருமித்த கருத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.

சீனா, ரஷ்யா மற்றும் பிறர் வெளியேறினர், அவர்களின் தூதர்கள் தீர்மானத்திலிருந்து விலகுவதாக அறிவித்து அவையை விட்டு வெளியேறியதுடன் மியான்மரின் தூதர் இந்த ஆவணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக, ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் தாமஸ் ஆண்ட்ரூஸ் மியான்மரில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் மனித உரிமைத் தலைவர்களை தன்னிச்சையாக தடுத்து வைத்திருப்பதைக் கண்டித்தார்.

அத்துடன் பாதுகாப்புப் படையினர் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக நேரடி துப்பாக்கிச் சூட்டை பயன்படுத்தியுள்ளனர் என்பதற்கான அறிக்கைகள் மற்றும் புகைப்பட ஆதாரங்களையும் அவர் மேற்கோள் காட்டினார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் வன்முறையிலிருந்து விலகி மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை முழுமையாக மதிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.

இதற்கிடையில், மியான்மருக்கு உள்நாட்டு அமைதியின்மையைக் கொண்டுவந்ததற்காக சீனாவுக்கு எதிராக நேபாளம், ஹாங்காங் மற்றும் பிற நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதேவேளை, மியான்மரில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டிருப்பது அந்த நாட்டு உள்நாட்டு விவகாரம். அதனை அரசியல்படுத்தக் கூடாது என்று ரஷ்யாவும் சீனாவும் கூறி வருகின்றன. எனினும், பெரும்பாலான மேற்குலக நாடுகளும் ஐ.நா.வும் மியான்மரின் இராணுவ ஆட்சியைக் கடுமையாகக் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.