'த க்ரே மேன்' படத்தின் லீக் ஆன தகவல்!

 


தனுஷ் நடிக்கவிருக்கும் ஹாலிவுட் திரைப்படமான ‘தி க்ரே மேன்’ என்ற படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் தனுஷ் அமெரிக்காவுக்கு சென்றார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் மூன்று மாதங்கள் அமெரிக்காவில் நடக்கும் என்று தெரிகிறது


இந்த நிலையில் இந்த திரைப்படம் மார்க் க்ரேனி என்பவர் எழுதிய நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது என்பதும் அவெஞ்சர்ஸ் இயக்குனர்கள் இந்த படத்தை இயக்க உள்ளார்கள் என்பதும் தெரிந்ததே.


இந்த நிலையில் சமீபத்தில் மார்க் க்ரேனி அளித்த பேட்டியில் தனுஷ் நடிக்கும் கேரக்டர் குறித்த தகவலை லீக் செய்துள்ளார். இந்த படத்தில் பணத்திற்காக கொலை செய்யும் கூட்டத்தின் தலைவனாக தனுஷ் நடிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இதே படத்தில் சிஐஏ அதிகாரி வேடத்தில் ரியான் கோஸ்லிங் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மார்க் க்ரேனி மேலும் கூறுகையில் ’தனுஷுடன் நான் பழகியதில்லை என்றாலும் அவர் என்னை கவர்ந்த நடிகர்களில் ஒருவர். ட்விட்டரில் என்னை 6 ஆயிரம் பேர்தான் பின்தொடர்கிறார்கள். அதில் எந்த ஸ்பெஷலும் இல்லை என்றாலும் தனுஷ் என்னை பின்தொடர்வதும், அவரை 9.7 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள் என்பதும் மிகப்பெரிய விஷயம்’ என்று கூறியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.