சிவகார்த்திகேயனை வாழ்த்திய ஐபிஎஸ் அதிகாரி!!

 


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது என்பதும் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடமிருந்து கலைமாமணி விருதை சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார் என்பதையும் பார்த்தோம்


இந்த நிலையில் கலைமாமணி விருதைப் பெற்ற சிவகார்த்திகேயன் நேராக தனது தாயிடம் சென்று அதை கொடுத்து அவரது காலில் விழுந்து ஆசி வாங்கிய புகைப்படங்களும் இதுகுறித்த ட்வீட் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார். அந்த ட்விட்டில் அவர் கூறியிருப்பதாவது:


சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும், இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி. தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம்’ என்று தனது தாயாருக்கு கலைமாமணி விருதை சமர்ப்பிக்கும் வகையில் பதிவு செய்து இருந்தார்.


இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது கிடைத்ததை அடுத்து தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் ஐபிஎஸ் அதிகாரியும் நெல்லை மாவட்ட துணை கமிஷனருமான அர்ஜூன் சரவணன் அவர்கள் தனது டுவிட்டரில் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இந்த புகைப்படங்களை தனது டுவிட்டரில் பகிர்ந்து கூறியிருப்பதாவது:


தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது - நபிகள் நாயகம். உலகத்தில் சுயநலமே கலக்காத ஒரு தியாகி உண்டென்றால்,அது தாயாகவே இருக்க முடியும். தியாகத்தின் மொத்த உருவம் தாய்தான். என்றும் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வாழ்த்துகள். உலகின் சிறந்த சொல் செயல் தான்.


சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ’ உலகின் சிறந்த சொல் செயல் தான்’ என்ற இந்த புகழ் பெற்ற வசனத்தை அவர் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.