நடிகர் சோனுசூட் செய்த மகத்தான செயல்!

 


தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட பல மொழிகளில் வில்லன் கேரக்டர்களில் நடித்தவர் பிரபல நடிகர் சோனு சூட். இவர் கொரோனா ஊரடங்கின்போது மக்கள் மனதில் ஹீரோவாக மாறினார் என்பதும் இவர் செய்த பல உதவிகள் குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு செய்த உதவிகள் யாராலும் மறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


அதுமட்டுமின்றி யார் என்ன உதவி கேட்டாலும் அந்த உதவியை அவர் உடனடியாக செய்து வரும் வழக்கத்தை உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் ஜான்சி என்ற கிராமத்தில் இருந்த ஒருவர் சோனுசூட் அவர்களை அணுகி, தங்களுடைய கிராமத்திற்கு தண்ணீர் வசதி இல்லை என்றும் பல கிலோமீட்டர்கள் சென்றுதான் தண்ணீர் எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.


இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக அந்த கிராமத்திற்கு ஒரு போர்வெல் போடுவதற்கு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். அடுத்த சில மணி நேரங்களில் அந்த கிராமத்தில் போர்வெல் போடப்பட்டு தற்போது அங்கு தண்ணீர் வசதி வழங்கப்பட்டிருக்கிறது


பல ஆண்டுகாலம் அரசியல்வாதிகளிடம் சொல்லி தீராத பிரச்சினையை ஒரு சில மணி நேரத்தில் சோனு சூட் செய்துள்ளார் என்பதும் இந்தியாவின் ரியல் ஹீரோ சோனு சூட் தான் என்றும் அவரை அந்த கிராமத்து மக்கள் பாராட்டி வருகின்றனர். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.