டொம் மூடி இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக நியமனம்!
இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம் மூடி நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கட்டின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து டொம் மூடி இந்த பதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று வருட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக டொம் மூடி செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை