மனைவியை விவாகரத்து செய்த அஸீம் வெளியிட்ட பதிவு!

 


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே இன்ஸ்டாகிராமில் 20 மில்லியனுக்கும் மேலாக ஃபாலோயர்களை வைத்து பிரபலமாக இருந்தவர் தொலைக்காட்சி நடிகை ஷிவானி நாராயணன் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஷிவானியுடன் தொலைக்காட்சி தொடரில் நடித்த நடிகர் அஸீம் ஷிவானியையும் என்னையும் நிம்மதியாக இருக்க விடுங்கள் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்


விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல்நிலவு உள்பட ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தவர் நடிகர் அஸீம். பகல் நிலவு தொடரில் அஸிம், ஷிவானி இணைந்த நடித்தபோது இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்-அவுட் ஆகியதாகவும், இருவருக்கும் காதல் என்று கிசுகிசு கிளம்பியது. இதனையடுத்து அஸிம் தனது மனைவியை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தை அணுகியபோது இந்த வதந்தி மேலும் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் தற்போது நடிகர் அஸீம் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை செய்துள்ளார் அதில் ’நான் தற்போது முறைப்படி எனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டேன். இதை வைத்து ஷிவானியுடன் எனக்கு திருமணம் என்று ஒரு சிலர் கிளப்பி விடுகிறார்கள். மேலும் ஷிவானிக்காக தான் நான் எனது மனைவியை விவாகரத்து செய்ததாக கூட வதந்தியை கிளப்புகிறார்கள். தயவு செய்து அந்த பெண்ணையும் நிம்மதியாக இருக்க விடுங்கள் என்னையும் நிம்மதியாக இருக்க விடுங்கள் என்று பதிவு செய்துள்ளார்


இந்த பதிவை அடுத்து ஷிவானி மற்றும் அஸீம் இடையே வெறும் நட்பு மட்டும் தான் உள்ளது என்பது உறுதியாகி உள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.