சொக்லேற் கனவுகள் 22- கோபிகை!!

 


தான் பற்றியிருந்த 

ஆதியின் கரங்களை

பட்டென்று 

விட்டுவிட்டாள் அனுதி. 


வெட்க நண்டுகள்

உடலெங்கும் ஊர்ந்தன. 

செங்கனம் தாங்காது

கவிழ்ந்தது மதிமுகம். 


'ஏய்....என்னது.....?'

அவன் அவசரமாய் கேட்க

'என்ன.....?' என்றாள் 

செல்ல மிழற்றலாய்....


'வைத்தால் குடுமி,

எடுத்தால் மொட்டையா,'

இருபத்தாறுவருச காதலை

இப்பதான் சொல்லியிருக்கிறன்,


'நீ என்னடா எண்டா,

கையைத் தட்டுறாய்?

முகத்தை திருப்பிறாய்,

என்னடி?.......'


ஓயாமல் பேசும்

அவனுடைய தேவதை,

வார்த்தைகளின்றி 

மௌனமாய்ச் சிரித்தாள். 


பெண்ணுக்கேயுரிய நாணம்

அவளைப் பற்றியிருக்க,

விழிகளில் அவள் 

வண்ணமொழி உரைத்தாள். 


'அனு......எங்கட 

இந்த முடிவை,

இந்த சந்தோசத்தை,

வீட்டில சொல்லவேணும்.....'


'முதல்ல அத்தையிட்டதான்...'

அவள் சொல்ல,

அவன் மறுத்தான்,

'என்ர அத்தையிட்டதான்....'


உனக்கும் வேண்டாம்,

எனக்கும் வேண்டாம்....

எல்லாரையும் கூட்டிவைச்சு

பாட்டிவீட்டில சொல்லலாம்...


சந்தோச வானில் 

சிறகடித்துப் பறக்கும்

இரு புறாக்களாய் 

நடந்தனர் இருவரும்.....


சட்டென்று நின்ற ஆதி,

'ஏன் அனு, 

உனக்கு சந்துதனை....

பிடிச்சா சொல்லு.....நானே....'


அருகிலிருந்த 

அலரிமரத்து தடியை 

எடுத்தவள்,

'உன்னை.....' என்றபடி

கலைக்கத் தொடங்கினாள். 


'ஏய்....புருஷனை அடிக்கிறது

நல்ல பழக்கமில்லை,

தடியைக் கீழ போடு'

சொன்னபடி சிரித்தான்

ஆதித்தன்......


'டேய்....நீதான் செகன்ட்கான்ட்,

ஏதோ, போனா போகுதெண்டு

நான் சரி சொன்னன், 

வேறயார் உன்னை ஏற்பா?'


'அனு....கனிகாட்ட நான்

காதல் சொல்லவே இல்லடி,

அப்பிடில்லாம் சொல்லாத.....'

சற்று சோகமாகவே சொன்னான். 


அருகில் ஓடிவந்து 

அவன் கரம் பற்றியவள்,

'விளையாட்டுக்குத்தான்டா...

மன்னிச்சிடு.....'என்றதும்

கைகளை இறுகப்பற்றி

சேர்த்தணைத்துக்கொண்டான்

ஆதித்தன். 


கனவுகள் தொடரும்

கோபிகை.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.