கலாநிதி சர்வன் பதவியில் இருந்து நீக்கம்!


 யாழ் பல்கலைக்கழக பொருளியல் துறையின் சிரேஸ்ர விரிவுரையாளர் கலாநிதி சர்வன் நேற்றைய தினம் நடைபெற்ற பல்கலைக்கழக Council கூட்ட முடிவின் படி பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
ஒரு ஆளுமை உள்ளவரை அவர் பதவிக்கு விண்ணப்பித்த நாளில் இருந்து அப்பதவிக்கு வரவிடாமல் ஒரு கூட்டம் துரத்தி இறுதியில் வெற்றியும் கண்டிருக்கிறது.கடந்த 3 வருடங்களாக அவரை தூக்குவதற்காக காரணம் தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல ஒரு காரணம் கிடைத்திருக்கிறது.

ஆம் அதுதான் வழமையான புத்தக பூச்சி படிப்புகளை தாண்டி பிரித்தானிய முறையில் கல்வி கற்பித்த சர்வன் அவர்கள் மாணவர்கள் நலன் கருதி பரீட்சை நேரம் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் அனைவருக்கும் (42 மாணவர்களுக்கு) பரீட்சையில் வரக்கூடிய வினாக்களை அல்லது மாதிரி வினாக்களை மெயில் மூலமாக வழங்கினார் என குற்றம் சாட்டியே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

பரீட்சை விதிமுறைப்படி பரீட்சையில் வரக்கூடிய வினாக்களை வழங்குவது தவறே எனிலும் சகல மாணவர்களுக்கும் வழங்கியது என்பது அவரது உள்நோக்கமற்ற மாணவர்கள் நலன் சார்ந்த வெளிப்படையான செயல்பாடே ஆகும்.3 வருடமாக சிரேஸ்ர விரிவுரையாளராக இருந்த ஒரு கல்வியியளாளருக்கு பல்கலைக்கழக கவுண்சில் நல்ல சன்மானம் வழங்கியிருக்கிறது.
பல்கலைக்கழக கவிண்சில் அவருக்காக இரண்டு தெரிவுகளை முன்மொழிந்தது
1. Two years probation period extension
2. Termination
ஆனால் கவுண்சில் உறுப்பினர்கள் அனைவரும் இரண்டாவது தெரிவை எடுத்து அவரை பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார்கள்.பதவிநீக்கத்திற்கு ஆதரவாக பொருளியல் துறையின் தலைவரது கடிதமும் இருந்திருக்கிறது.எனவே தான் கவுண்சில் உறுப்பினர்கள் தெரிவு இரண்டினை எடுத்ததாக குறிப்பிடப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.